திமுக துரைமுருகன் ஆலைக்கு சீல்... கதிர் ஆனந்தை கதறவிட்டு எச்.ராஜா அதிரடி ட்வீட்..!

By vinoth kumarFirst Published Mar 4, 2020, 3:08 PM IST
Highlights

நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோதமாக அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா துரைமுருகன் மகன் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ராட்சத மோட்டார் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் குடிநீர் விற்பனை செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கும் கீழே சென்று விட்டது.

இதையும் படிங்க;- ஏரி பகுதிக்கு தூக்கிச்சென்று ஏடாகூடமாக பலாத்காரம்.. வெறி தீராததால் அந்த இடத்தில் கல்லை போட்ட கொடூரன்கள்.!

இதனையடுத்து, நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோதமாக அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க;- தன்னைவிட 15 வயது முதிய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்..!

மேலும், வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் 37 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்நாளில் 24 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் 8 நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழு இணைந்து சீல் வைத்தனர். இதில், காட்பாடி அருகே உள்ள கசம் கண்டிப்பேடு பகுதியில் இயங்கி வரும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான அருவி என்ற குடிநீர் நிறுவனத்தில் போர்வெல் பம்ப் குழாய் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிறுவனம் கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டர் பதிவில்;- சட்டத்தை மதிப்பவராக இருந்தால் அவர் எப்படி திமுக எம்.பி.யாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

click me!