அவங்கதான் இதுக்கு காரணமே... சோனியாவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி அதிரடி...!

By vinoth kumarFirst Published Jan 14, 2020, 3:03 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக மீது குற்றம்சாட்டி கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது திமுக தரப்பை கடும் கோபம் அடைய செய்திருந்தது. இதனால், திமுகவுக்கும்- காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது சோனியா காந்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

திமுகவும்-காங்கிரஸ் கட்சியும் இணைந்த கைகள். இந்த கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக மீது குற்றம்சாட்டி கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது திமுக தரப்பை கடும் கோபம் அடைய செய்திருந்தது. இதனால், திமுகவுக்கும்- காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது சோனியா காந்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? என காட்டமாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று சோனியா காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி நிலவரம் குறித்து எடுத்துக் கூறினார்.

இதையும் படிங்க;-  கதறிய கே.எஸ்.அழகிரி..! கண்டுகொள்ளாத திமுக மேலிடம்..! அறிக்கை வெளியிட்டும் தவிக்க விட்ட பரிதாபம்..!

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை. திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள், இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை. மேலும், காங்கிரஸ் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது குறித்து டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்ட வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே தமிழக தேர்தலில் அதிக அளவில் வெற்றிபெற்றோம் என கே.எஸ்.அழகிரி கூறினார். 

click me!