முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகார்... அமைச்சர்களை அலறவிடும் ஆளுங்கட்சி எம்எல்ஏ..!

By vinoth kumarFirst Published Jan 14, 2020, 1:36 PM IST
Highlights

புதுச்சேரி, பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். அப்போது முதலமைச்சர் நாராயணசாமியை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக, கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிக்க போவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது எம்எல்ஏ தனவேலு, ஆதாரத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் நில அபகரிப்பு புகார் அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். அப்போது முதலமைச்சர் நாராயணசாமியை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக, கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிக்க போவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது எம்எல்ஏ தனவேலு, ஆதாரத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லி விரைந்தனர். இந்நிலையில், நேற்று மாலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தனவேலு சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் தொடர்பான ஊழல் கோப்புகள் அனைத்தையும் சேகரித்து வருவதாகவும் விரைவில் அவற்றை துணைநிலை ஆளுநரிடம் ஒப்படைக்கபோவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் மீதும் நில அபகரிப்பு புகாரும் தெரிவித்துள்ளார். இதனால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!