ஆர் எஸ் எஸ் காரர் போல் பேசும் தமிழக ஆளுநர்..! திராவிடம் குறித்த பேச்சுக்கு திமுக பதிலடி

By Ajmal KhanFirst Published Oct 11, 2022, 3:18 PM IST
Highlights

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான் ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதற்கு திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தார்களா..?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு நிகழ்வில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கூறி வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது திராவிடம் என்ற சொல்லுக்கு ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். நேற்று நடைபெற்ற  ஒரே பாரதம், உன்னத பாரதம் இணைக்கும் பாரதம்கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசியவர்,  வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர் ஆனால் அது உண்மை இல்லை,இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை, ஆங்கிலேயர்கள் 1905ஆம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம் ,கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரிக்கப்பட நேரத்தில் தமிழகத்தில் வா.ஊ.சி பாரதியார் போராடினார்கள், பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலபத் சம்பவத்தை எதிர்த்து காமராஜர் போராடினார் எங்கோ நடக்கிறது என அவர்கள் அமைதியாக இருக்கவில்லை இந்தியாவை தெரிந்துகொள்ள புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரத் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

தமிழகம் மட்டும் அல்ல..? பல மாநிலங்களை உள்ளடக்கியது தான் திராவிடம்! தேசிய கீதத்தை சுட்டிகாட்டிய ஆர்.என்.ரவி

தமிழ் மட்டும் திராவிடம் அல்ல

மேலும் 1956ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகணமாக இருந்தது அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா,கர்நாடக,ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டதாக கூறினார். மேலும் பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான் நீ என தற்போது பேசி வருகின்றனர், தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான் ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருவதாகவும்,  அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை சுறுக்கி உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதற்க்கு திமுக நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர்.

தமிழக மக்களிடம் மொழி வெறியை தூண்டிய மு.க.ஸ்டாலின்..! மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

ஆளுநர்- ஆர்எஸ்எஸ்காரர்

திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, 'அந்த நிலங்களின் மூத்த தாய் மொழி தமிழ். அதில் இருந்துதான் தெலுங்கு, கண்டம், மலையாளம், துளு, கோண்டு, ராஹ்மகால் போன்ற மொழிகள் பிரிந்தன! இனத்தால்,நிலத்தால் நாங்கள் திராவிடர்கள். மொழியால் தமிழர் அதில் இருந்து பிரிந்த தெலுங்கர்,கண்டர்,மலையாளிகள்' என்று விளக்கமளித்துள்ளார். இதனை தொடர்ந்து திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநரின் கருத்தை நிராகரித்தார். தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் கார்ர் போல் செயல்படுவதாக விமர்சித்தார். ஆளுநரின் கருத்தை கண்டுகொள்ள கூடியது அல்ல என கூறினார். 

இதையும் படியுங்கள்

சீமான் தான் உண்மையான மன நோயாளி..! எப்போதாவது மனநலம் பாதித்து நான் பேசி இருக்கிறேனா.? எச்.ராஜா ஆவேசம்

 

click me!