ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறமை இல்லை.. அதிமுகவை பார்த்து அலறுகிறார் முதல்வர்.. செல்லூர் ராஜூ தாறுமாறு.

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2022, 2:25 PM IST
Highlights

அதிமுக பலமாக இருப்பதை கண்டு ஸ்டாலின் பயப்படுவதால் தான் அதிமுக  உடைந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

அதிமுக பலமாக இருப்பதை கண்டு ஸ்டாலின் பயப்படுவதால் தான் அதிமுக  உடைந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.தனக்கு நிர்வாகத் திறன் இல்லை என்பதையே அவரது பொதுக்குழு பேச்சு வெளிப்படுத்தியுள்ளது என்றும் செல்லூர்ராஜூ விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இருந்தே அரசுக்கு எதிராக விமர்சனங்கள் கடுமையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் திமுக அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களின் பேச்சு அரசுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகளிரின் இலவச பேருந்து பயணத்தை ஓசி என விமர்சித்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதேபோல் கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் ஒருவரை ஏய் நீ உட்காரு அப்புறம் பேசு என அவர் ஒருமையில் பேசியது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கிடையில் மூத்த அமைச்சர்  எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுகொடுக்கவந்த பழங்குடியின சமூக பிரதிநிதி இரணியன் என்பவரை நடந்திய விதம் கண்டனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில்தான் பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தயவுசெய்து அதிமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் மக்கள் மத்தியில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,  

கண்ணியத்துடன் பேச வேண்டும், தயவுசெய்து இதை பின்னபற்றுங்கள் என வலியுறுத்தி பேசினார். அவரின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலமைச்சரின் இந்த பேச்சு குறித்து பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சு என்பது அவருக்கு நிர்வாகத்திறமை இல்லை என்பதை காட்டுகிறது என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக மிக வலுவாக இருப்பதை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார், அதனால்தான் அதிமுக உடைந்து விட்டது என அவர் பேசுகிறார். திமுக பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி போல தனது நிலைமை உள்ளது என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் தெரியுமா? நாள் குறித்த அமைச்சர்..!

இதுவரை எந்த முதலமைச்சரும் எந்த காலகட்டத்திலும் பேசாததை அவர் பேசியுள்ளார். நிர்வாகத்திறமையின்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கட்சியின் நிர்வாகிகளை தான் குறிப்பிடுகிறாரா என தெரியாத அளவிற்கு ஒரு பயத்துடன் பேசியுள்ளார்.  மேலும், திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கையான உள்ளது என்றும் வேறு எந்த கொள்கையையும் அதிமுகவிற்கு இல்லை என முதலமைச்சர் கூறுகிறார். எந்தக் கொள்கையும் இல்லாத அதிமுக வையா மக்கள் 32 ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்தினார்கள்.? திமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் குறு கால திட்டங்கள் ஆனால், அதிமுகவின் திட்டங்கள் மக்களுக்கான சாகா திட்டங்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களிடம் மொழி வெறியை தூண்டிய மு.க.ஸ்டாலின்..! மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

 

 

 

click me!