கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் தெரியுமா? நாள் குறித்த அமைச்சர்..!

By vinoth kumar  |  First Published Oct 11, 2022, 2:02 PM IST

சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!

குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. 

2019ல் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி தற்போது முழுமை அடைந்துள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக  அமைச்சர் முத்துசாமி கூறுகையில்;-  2023ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. முகநூல் வீடியோ வெளியிட்ட நபரின் நிலையை பார்த்தீங்களா.!

click me!