தமிழக மக்களிடம் மொழி வெறியை தூண்டிய மு.க.ஸ்டாலின்..! மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

By Ajmal KhanFirst Published Oct 11, 2022, 2:00 PM IST
Highlights

 ஊடகத்தில் வந்த  தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.  மக்கள் மத்தியில் மொழி வெறியை தூண்டக்கூடிய வகையில் கருத்தை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 
 

கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பா

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி மொழியை நாடு முழுவதும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் பாஜக மாநில துணை தலைவர்  நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மத்திய உள் துறை அமைச்சரின் பரிந்துரையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஊடகத்தில் வந்த  தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.  மக்கள் மத்தியில் மொழி வெறியை தூண்டக்கூடிய வகையில் கருத்தை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து கேள்வி பதில் வாயிலாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், 


மறுப்பு தெரிவித்த பாஜக

1. ஐஐடி.ஐஐஎம் எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச்செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைகள் உள்ளதை ஏடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நம் பதில் : தவறானது. ஏடுகள் சுட்டி காட்டுவதை கொண்டு முதல்வர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கூட.. மேற்கண்ட கல்வி நிலையங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஏன்?

2. இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது.

நம் பதில்: அது போன்ற பரிந்துரை எதுவும் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக முதல்வர் சொல்வது ஏன்? மொழி அரசியலுக்காக தவறான செய்திகளை ஒரு முதலமைச்சர் வெளியிடுவது முறையல்ல.

3. இந்தியை பொதுமொழியாக்க மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நம் பதில்: தவறு ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. அதாவது தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வறுபுறுத்தியுள்ளது இந்த குழு. தமிழ் பயிற்று மொழியாக இருப்பதற்கு முதல்வர் ஏன் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்?

இந்தி பேசாத மக்கள் மீது போர்... அமித்ஷாவின் திட்டத்தை சொல்லி அலறும் வைகோ.

4. மத்திய அரசுப்பணிக்கான போட்டி தேர்விலிருந்து ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையை முன்வைத்திருப்பது ஏன்?

நம் பதில்: இல்லை. ஆங்கில கட்டாய பாடத்தை மட்டுமே, தேர்விலிருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இனி ஆங்கிலத்திற்கு பதில் தமிழ் இடம் பெறும். இதை ஏன் தமிழக முதல்வர் எதிர்க்கிறார்?

5. நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை கட்டாயமாக்க முயல்வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக்குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளை பேசுவோர் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக்கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்த வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேரெதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

நம் பதில்: தமிழை பயிற்று மொழியாக கொண்டு வருவது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றா? ஹிந்தி பேசும் மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என, அதாவது தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயம் என பரிந்துரை செய்திருப்பது குற்றமா? அனைத்து மொழிகளையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்ற பார்வையுடனே இந்த பரிந்துரைகள் உள்ள போது அதை எதிர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம். ஹிந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. அதை ஏன் திமுக எதிர்க்கிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ்யின் கருத்தை செயல்படுத்தி இந்தியாவை பாஜக சிதைக்கிறது.!ஸ்டாலினை ஆதரித்து களத்தில் இறங்கிய பாலகிருஷ்ணன்

தமிழுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலின்.?

அதே போல், ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நீதிமன்ற தீர்ப்புகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து அளிக்க வேண்டும் என்றும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது நம் நீண்ட நாள் கோரிக்கை தானே? மத்திய அரசு, மாநில அரசோடு இது நாள் வரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி நம். தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பதேன்? இதை தானே இவ்வளவு நாட்களாக கேட்டு கொண்டிருந்தோம்? இதற்கு தானே பல்வேறு போராட்டங்கள்? இதற்கு தானே நாம் போராடினோம்? இப்போது நிறைவேறப்போகிற போகிற வேளையில் ஏன் எதிர்க்கிறீர்கள்? ஓ! இனி மொழி அரசியல் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்ய முடியாது என்ற அச்சமா? இது முறையா? தமிழுக்கு நீங்கள் செய்யும் துரோகம் அல்லவா முதல்வர் ஸ்டாலின் அவர்களே! என அந்த அறிக்கையில் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

கட்டாயப்படுத்தி இந்தியை திணிக்காதீர்..! நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.! எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்

 

click me!