சீட்டு கிடைத்ததால் சினிமா டீமை அந்தரத்தில் தவிக்க விட்ட திமுக வேட்பாளர் சரவணன்

First Published Oct 23, 2016, 7:27 AM IST
Highlights


திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாகடர் சரவணன் தனக்கு கிடைத்த வாய்ப்பால் தன்னை நம்பி சினிமா எடுக்க காத்திருந்த மொத்த யூனிட்டையும் கை கழுவி விட்டு அரசியல் வேலைகளில் இறங்கி விட்டாராம். இப்ப அந்த டீம்  ”” ஙே ”” என விழித்து கொண்டு நிற்கின்றனர்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாகடர் சரவணன் ஒரு சினிமா நடிகரும் கூட. மதுரைக்குள்ளேயே நடித்து மதுரையிலேயே ரிலீஸ் செய்து மதுரையிலேயே பிரபல நடிகராக வலம் வருபவர். ’’’’சரித்திரம் பேசு  ‘’’’  , ‘’’’ அகிலன்  ‘’’’என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இவர் மதிமுகவில் இருந்த போது வைகோவுக்கு எல்லாமுமாக இருந்தார். பின்னர் தனது பிரபலமான தரத்துக்கு தேசிய கட்சிதான் சரி என பாஜகவுக்கு தாவினார். அங்கும் இரண்டு மாதம்  கூட பொறுக்காமல் உடனடியாக திமுக திரும்பினார்.

தற்போது இவரது கலைச்சேவையை பாராட்டி இருக்கிற மூத்த கட்சிக்காரர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தற்போது டாகடர் சரவணனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணத்தில் LimCa சாதனைக்காக 10 மணி நேரத்தில் நடித்து முடிக்க ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து அதற்கு பெயரும் வைத்து பூஜை போட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து யூனிட் எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டாராம்.

படத்தின் பெயர்  “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் “ . ஆனால் இப்போது இந்த படத்தின் வேலைகளை தூக்கி ஓரம்போட்டுவிட்டதால் சாதனை முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் , தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

click me!