இன்று மாலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது..? நாளை தேர்தல் அறிக்கை..

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2021, 11:51 AM IST
Highlights

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை உறுதி செய்யப்பட்ட பின்னர், வேட்பாளர் பட்டியலை  வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதே போல் திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தேர்தல் அறிக்கை நாளை வெளியாக உள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியல்  இன்றும், அதன் தேர்தல் அறிக்கை நாளையும் (வெள்ளிக்கிழமை)  வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக களம் காணும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்  பட்டியல் தயார் நிலையில் உள்ளதால், அது இன்று மாலை வெளியாக உள்ளது. 

திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது,  அதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகள் 173 தொகுதிகளில் திமுக போட்டிருக்கிறது.  திமுக கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 13 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி இடுகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் என மொத்தம் 187 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் இன்றும், அதன் தேர்தல் அறிக்கை நாளையும் (வெள்ளிக்கிழமை)  வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக களம் காணும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்  பட்டியல் தயார் நிலையில் உள்ளதால், அது இன்று மாலை வெளியாக உள்ளது. 

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை உறுதி செய்யப்பட்ட பின்னர், வேட்பாளர் பட்டியலை  வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதே போல் திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தேர்தல் அறிக்கை நாளை வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இன்று, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.  

 

click me!