பாஜகவும் தன்னை ஏமாற்றி விட்டது... தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட குஷ்பு..!

Published : Mar 11, 2021, 11:28 AM IST
பாஜகவும் தன்னை ஏமாற்றி விட்டது... தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட குஷ்பு..!

சுருக்கம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மக்களுக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்வேன். நான் தொகுதியின் பாஜக பொறுப்பாளர் மட்டுமே. 

திமுகவில் இருந்தபோதும் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார் குஷ்பு. பின்னர் விரக்தியில் அன்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அங்கும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்து பாஜகவிற்கு தனது இருப்பிடத்தை மாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தமக்கு பாஜக சீட் கொடுக்கும் என நம்பினார். அதற்காக ஃபீல்ட் ஒர்க்கிலும் இறங்கினார். ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.

அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மக்களுக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்வேன். நான் தொகுதியின் பாஜக பொறுப்பாளர் மட்டுமே. வேட்பாளர் என ஒருபோதும் சொன்னதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!