ஆதரவாளர்களை கைவிட்ட ஓபிஎஸ்.. 40 சிட்டிங் எம்எல்ஏ.க்களை தூக்கியடித்த எடப்பாடியார்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள்.!

By vinoth kumarFirst Published Mar 11, 2021, 11:46 AM IST
Highlights

அதிமுக வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியானது. அதில், போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - பழனிசாமி, விழுப்புரம் - சி.வி.சண்முகம், ராயபுரம் - ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அத2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியானது. இதில், முன்னாள் அமைச்சர்களான பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபில், சிட்டிங் எம்எல்ஏவும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான செம்மலை உள்ளிட்ட  41 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது, கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 சிட்டிங் எம்எல்ஏக்கள் விவரம்

* திருத்தணி - நரசிம்மன் 

*  கே.வி.குப்பம் - லோகநாதன், 

*  வாணியம்பாடி - நிலோபர் கபில்

*  ஊத்தங்கரை - மனோரஞ்சிதம், 

*  பர்கூர் - வீ.ராஜேந்திரன்,

*  கள்ளகுறிச்சி - பிரபு

*  கங்கவள்ளி - மருதமுத்து 

*  ஆத்தூர் - சின்னதம்பி 

*  ஓமலூர் - வெற்றிவேல்

*  மேட்டூர் - செம்மலை

*  சங்ககிரி - எஸ்.ராஜா

*  சேலம் (தெற்கு)- சக்திவேல்

*  வீரபாண்டி - மனோன்மணி 

*  சேந்தமங்களம் -சந்திரசேகர் 

*  பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்

*  அந்தியூர் - ராஜா கிருஷ்ணன்

*  பவானி சாகர் - ஈஸ்வரன்

*  குன்னூர் - ராமு

*  மேட்டுபாளையம் - ஓ.கே. சின்னராசு 

*  பல்லடம் - நடராஜன் 

*  கவுண்டபாளையம் - ஆறுகுட்டி

*  கிணத்துகடவு -சண்முகம்

*  வால்பாறை - கஸ்தூரி வாசு 

*  கிருஷ்ணராயபுரம் - கீதா

*  ஸ்ரீரங்கம் - வளர்மதி

*  மணச்சநல்லூர் - பரமேஸ்வரி 

*  பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்

*  பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்* 

*  விருத்தாசலம் - கலைச்செல்வன் 

*  மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்

*  பட்டுக்கோட்டை - வி.சேகர், 

*  பேராவூரணி - கோவிந்தராஜூ, 

*  கந்தர்வகோட்டை - ஆறுமுகம்

*  அறந்தாங்கி - ரத்தினசபாபதி, 

*  சிவகங்கை -பாஸ்கரன்

*  கம்பம் -ஜக்கையன்

*  ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா 

*  இராமநாதபும் - மணிகண்டன் 

*  அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்

*  நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன்

*  சோளிங்கர் - சம்பத் 

*  சாத்தூர் -ராஜவர்மன்

click me!