அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதா ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகளை பட்டியலிட்டு திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சேலத்தில் திமுகவினர் ஏற்கனவே போஸ்டர்கள் ஒட்டி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மாநகர பகுதிகளில் திமுக மத்திய மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
போஸ்டரில் ராஜ்பவன் ஆர்.என் ரவி எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்? எனவும் கொள்ளை குற்ற வழக்குகளை சுமந்து கொண்டிருக்கும் 8 மத்திய மந்திரிகளின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவாயா? என கேட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
’இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது’ - அண்ணாமலை காட்டம்
இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வத்தலகுண்டு பேருந்துநிலையம், டென்னிஸ் கிளப் ரோடு, காந்திநகர் மெயின் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக என பெயரிட்டு வால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதை அவ்வழியே செல்வோர் கூட்டம் கூட்டமாக நின்று படித்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“ஆடி அமாவாசனை சிறப்பு யாத்திரை” நெல்லை - காசி இடையே பாரத் கௌரவ் சிறப்பு ரயில்