திமுக புதிய பொதுச் செயலாளராகிறார் ஐ.பெரியசாமி.! தென்மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்கும் ஸ்டாலின்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2020, 11:49 PM IST
Highlights

திமுக வில் யார்? அடுத்த பொதுச்செயலாளர் என்கிற கடுமையான போட்டி மூத்த தலைகளுக்கு இடையே விரிந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் இடத்தை யார் நிரப்ப முடியும். இனமான பேராசிரியர் என்ற இடத்தை அவரைத்தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

T.Balamurukan

திமுக வில் யார்? அடுத்த பொதுச்செயலாளர் என்கிற கடுமையான போட்டி மூத்த தலைகளுக்கு இடையே விரிந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் இடத்தை யார் நிரப்ப முடியும். இனமான பேராசிரியர் என்ற இடத்தை அவரைத்தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

தமிழ்நாட்டில் திமுக மிகப்பெரிய கட்சி. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை. 1977ம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்சியில் இருந்து வெளியேறி மக்கள் திமுக என்கிற கட்சியை ஆரம்பித்தார். அப்போது பொதுச்செயலாளர் பதவி காலியானது. அந்த சமயத்தில் தான் தனக்கு நெருங்கிய நட்பு கொண்டிருந்த அன்பழகனை பொதுச்செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.சுமார் 43 ஆண்டுகள் திமுக வின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் சகாப்தம் மார்ச் 7ம் தேதியோடு முடிவுக்கு வந்தது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதியும் இல்லை. பொதுச்செயலாளர் அன்பழகனும் இல்லை. மாபெரும் இரண்டு தலைகள் மண்ணுக்குள் முடங்கிவிட்டார்கள். தற்போது புதிய தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. கலைஞர் தன் நட்புக்கு எப்படி பொதுச்செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தாரோ..! அதே பாணியை ஸ்டாலின் செய்வாரா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


திமுக பொருளாளர் துரைமுருகன் துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி ,சுப்புலட்சுமி ஜெகதீசன், டிஆர் பாலு, ஆ.ராசா, பொன்முடி, ஏ.வ. வேலு போன்றவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகிறது.கட்சியில் சீனியர் என்று பார்த்தால் துரைமுருகன் தான். ஆனால் அவர் கட்சியின் பொருளாளராக இருக்கிறார். 

“பொதுச்செயலாளரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யப்படும் வரை பொதுச் செயலாளர் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வைத்துக்கொள்ளலாம் என்று கட்சியின் விதியில் உள்ளது” கட்சியின் பொதுச்செயலாளர் பதவி நியமிக்கப்படும் வரை பொதுச்செயலாளரின் அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பார் என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று  வருகிறது. இதில் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிர்வாகிகள் தேர்தலும் செப்டம்பர் மாதத்திற்குள் தலைவர் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட வேண்டும். கட்சியின் சீனியர் என்று பார்த்தால் துரைமுருகனுக்கு தான் பொதுச்செயலாளர் பதவி வழங்கவேண்டும். அவருக்குதான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறன்றது. அதே நேரத்தில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. 
சென்னை தலைநகர் ஸ்டாலின் இருக்கிறார்.திருவண்ணாமலை ஏ.வ வேலு இருக்கிறார். வேலூருக்கு துரைமுருகன் அவரது மகன் கதிர்ஆனந்த் இருக்கிறார். திருச்சி நேரு முதன்மைச் செயலாளர் மாவட்டச்செயலாளர் அன்பில் மகேஷ் போன்றவர்கள் அந்தந்த பகுதிகளை தங்கள், கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.ஆனால் தென் மாவட்டத்திற்கு என்று இதுவரைக்கும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு தலைமை  இல்லை. அதற்கான அதிகார மையம் இல்லை.தென்மண்டல அமைப்புச்செயலாளராக அழகிரி இருந்தபோது தென்மண்டலம் முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல். இந்த தேர்தல் திமுகவிற்கு வாழ்வா..சாவா.. என்கிற போராட்டம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவார் என்று திமுகவில் சொல்லப்படுகிறது.

தென்மாவட்டம் முழுவதும் இருக்கும் மாவட்டச்செயலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். தற்போது இருக்கும் எம்எல்ஏக்கள்  பெரும்பாலும் அதிமுகவினரே. எனவே இந்த முறை தென்மாவட்டத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று கணப்போட்டிருக்கிறாராம் ஸ்டாலின். பிரசாந்த் கிஷோர் போடும் கணக்கு பாஸ் ஆகவேண்டுமானால் ஒவ்வொரு மண்டத்திலும் அதை நிறைவேற்றும் தளபதிகள் இருக்க வேண்டும். 

 பொதுச்செயலாளர் பட்டியலில் துரைமுருகன், ஐ. பெரியசாமி, ஏவ வேலு ஆகியோர் மட்டுமே இடம் ;பெற்றிருக்கிறார்கள்.அழகிரி இடத்தை நிரப்ப ஐ. பெரியசாமியால் மட்டுமே முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். கலைஞர் இருக்கும் போதும், அழகிரி இருக்கும் போது நடந்த இடைத்தேர்தல்கள், சட்டமன்றத்தேர்தல்கள் எல்லாம் ஐ.பெரியசாமி தான் தென்மாவட்டத்தை வழிநடத்தினார். திமுக ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போடாமல் நாம் வெற்றி பெறுவதற்கான வழிகளை சொல்லுங்கள் என்று சீனியர்களிடம் ஸ்டாலின் கடுமைகாட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆக ஸ்டாலின் போடும் கணக்குப்படி பார்த்தால் தென்மாவட்டத்திற்கே பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும். 
ஸ்டாலின் லிஸ்டில் முதலில் இருக்கும ;பெயரும் ஐ.பி தானாம். எனவே புதிய பொதுச் செயலாளராக ஐ.பெரியசாமி நியமிக்கப்படுவார் என்று அண்ணா அறிவாலயம் வட்டாரங்கள் சிறகடிக்கத் தொடங்கியிருக்கிறது.
 

click me!