ஜன.24 அன்று மத்திய அரசை கண்டித்து மதுரையில் போராட்டம்... அறிவித்தது திமுக கூட்டணி!!

By Narendran SFirst Published Jan 22, 2023, 9:58 PM IST
Highlights

மத்திய அரசை கண்டித்து ஜன.24 ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. 

மத்திய அரசை கண்டித்து ஜன.24 ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்காக 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி, 2019 ஆம் ஜன.27 அன்று மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இதனை சுட்டிகாட்டி திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து மதுரையில் வரும் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக கூட்டணிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து மதுரை மாநகர் திமுக செயலாளர் கோ. தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது.

இதையும் படிங்க: அன்று ஆட்சியை அடகுவைத்தவர்கள் இன்று கட்சியை அடகுவைத்துவிட்டு தவிக்கிறார்கள்... அதிமுகவை விமர்சித்த உதயநிதி!!

இதைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே வரும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது. இதில், மதுரை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். திமுக கூட்டணி கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

click me!