DMK : ஃபேக்டரிக்குள் அத்துமீறி நுழைந்து திமுகவினர் அராஜாகம்... பணம் கேட்டு மிரட்டல்... பரபர குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Dec 8, 2021, 12:31 PM IST
Highlights

திமுகவின் இளம்பரிதி, அமைச்சர் பெயரைச் சொல்லியும், கட்சியினர் பெயரைச் சொல்லியும் பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

மதுரையை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ஓய்வு பெற்ற கலால் மற்றும் சுங்கத்துறை உதவி ஆணையர். இவரது மகள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, ராமராஜபுரம் கிராமத்தில் விவசாயமும், தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் இளம்பரிதி, எங்களது தொழிலுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரை தவறாக பன்படுத்தி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார். 

இவர்கள் பென் அக்ரோ டைரி பார்ம் நிறுவனத்தை அங்கு நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக  சந்திரசேகரின் மகன் ஜோஸ்வா இருக்கிறார். அவரோடு ப்காமேஷ், சுனில் குமார் ஆகிய மூவரும் இந்த நிறுவனத்தை ஒட்டிய கரட்டுப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது மாலை  5மணிக்கு ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் எங்களது ஊழியர்களிடம் வம்பு செய்தனர். அவர்களை விசாரிக்க எங்கள் நிறுவனத்திற்கு அழைத்து வந்தோம். 

அவர்களிடம் விசாரித்தபோது பெயர் முகவரி சொல்லவில்லை. பின்பு சற்று நேரம் கழித்து அதே ஊரைச்சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி பழனியம்மாளின் கணவன் இளம்பரிதி என்பவர் தலைமையில் 15 பேருக்கும் அதிகமானோர் அத்துமீறி எங்கள் நிறுவனத்திற்குள் நுழைந்தனர். ஆபாசமாக பேசி எங்கள் ஊழியர்களை அடித்து உதைத்தனர். கம்பெணியை எப்படி நடத்துகிறீர்கள் என்று பார்ப்போம் என மிரட்டிவிட்டு சென்றனர். கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்’’ என்கிறார் சந்திரசேகர். 

மேலும் அவர், ’’இப்போது இந்தப்பிரச்னை நடக்கவில்லை. பல நாட்களாக இளம்பரிதி அமைச்சர் பெயரைச் சொல்லியும், கட்சியினர் பெயரைச் சொல்லியும் பணம் கேட்டு மிரட்டி வந்தார். அடிக்கடி பணம் கேட்டு வந்ததால் கொடுக்க மறுத்த எங்கள் கம்பெனி மீதும், ஊழியர்கள் மீதும் விரோதப்போக்கை கடைபிடித்து வந்தார்’’ என்கிறார் சந்திரசேகர். திமுக ஆட்சி வந்தால் நில அபகரிப்பு, மிரட்டல், ரவுடியிஸம் வள்ர்ந்துவிடும் என்று எதிர்கட்சியான அதிமுக தொடர்ந்து கூறி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் கட்சிக்கும் - ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று திண்டுக்கல்வாசிகள் கூறுகின்றனர். மேலும் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்று இளம்பரிதி மேல் நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இளம்பரிதி தகராறு செய்யும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

"

click me!