தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்... கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..!

Published : Mar 08, 2021, 09:18 PM IST
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்... கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..!

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகின்றன. தற்போது டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றியடைந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 65 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அக்கருத்துக் கணிப்புக் கூறுகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 5 தொகுதிகளையும் அமமுக 3 தொகுதிகளையும் பிற கட்சிகள் 3 தொகுதிகளையும் வெல்லும் என்று கருதுக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் பொருத்தமானவர் என்று 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு 31 சதவீதம் பேரும் கமல்ஹாசனுக்கு 7.4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!