
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று திமுக., அதிமுக., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மனு தக்கல் செய்தனர்.
திமுக., சார்பில், ஏற்கெனவே போட்டியிட தேர்வு செய்யப்பட்ட மருது கணேஷ், இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். அவர் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல், அதிமுக., சார்பில் பல்வேறு போட்டிகளுக்குப் பின்னர், 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், மதுசூதனன் மீண்டும் போட்டியிட தேர்வு செய்யப் பட்டார். அவரும் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, அண்ணா உருவம் பொறிக்கப் படாத, மூவண்ணமான கருப்பு, எனக்கும் திமுக.,வுக்கும் தான் போட்டியே என்று சொல்லி வருகிறார் தினகரன். திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலினோ, இரட்டை இலைச் சின்னத்தைக் கண்டு அச்சம் கொண்டு தன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை எல்லாம் கோரிப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இன்னமும் மதிமுக., முடிவு எடுக்கவில்லை. விஜயகாந்த் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.