
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை டிடிவி தினகரன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, புதிய கொடியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய தினகரன் வந்தார். அந்த
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எங்களுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தினகரன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம், ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னம் இரட்டை இலை. அது தற்போது துரோகிகளின் கையில் உள்ளது. மக்கள் விரோத ஆட்சி செய்கிறவர்களின் கையில் உள்ளது. அதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் கூறினார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தினகரன், புதிய கொடியுடன் வந்தார். அந்த கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்ககளைக் கொண்டதாக இருந்தது. அதாவது அதிமுகவின் கொடியாகவே காட்சியளித்த அந்த கொடியில், அண்ணாவின் உருவம் இல்லாமல் இருந்தது.
தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தொப்பி சின்னம் கேட்டுள்ள நிலையில், சின்னம் ஒதுக்கப்படும்போதுதான் அது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.