திமுக அறக்கட்டளை நிதியை வச்சு பேனா சின்னத்தை எங்க வேணாலும் வைங்க.!! திமுகவுக்கு விஜயபிரபாகரன் கொடுத்த அட்வைஸ்

By Raghupati R  |  First Published Feb 11, 2023, 4:49 PM IST

மு.கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.


சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் அருகே பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன் கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைகிறது.

மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி சிலை கட்டமைப்பை முன்மாதிரியாக கொண்டு அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலம் அமைக்கப்படும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..வாரிசை சந்தித்த வாரிசு..! முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்த ஆதித்யா தாக்கரே - 2024 தேர்தல் முன்னோட்டமா.?

இந்த பாலம் தரையின் மேல் 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் தூரம் இருக்கும். இந்த பகுதிக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள்ளது. கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் வைக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்,  ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் தேமுதிக தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம். தேமுதிக தொண்டர்கள் களத்தில் இறங்கி வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  வேதிமுக வைத்துள்ள பேனா சின்னம் குறித்து முதல் அறிக்கை தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தவறான விஷயம் ஆகும்.

இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

இதையும் படிங்க..இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்..! மாணவிகளுக்கு ஸ்கூட்டர்.! திரிபுரா தேர்தல் - இலவசங்களை அள்ளி வீசிய பாஜக !!

click me!