ஜனநாயக வழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோத செயல் அல்ல! அவர விடுதலை செய்யுங்க! டிடிவி.!

போராட்டம் நடத்துபவர்களின் அழைப்பின் பேரில்  அவர்களை சந்திக்கச் சென்ற பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழ. வெற்றிச்செல்வன்  தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையம் அழைத்துச்  செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரந்தூர் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்ட  பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனை  விடுவிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமானநிலையம் அமைப்பதற்காக 13 கிராமங்களை சேர்ந்த 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் 200 ஆவது நாளாக ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Latest Videos

போராட்டம் நடத்துபவர்களின் அழைப்பின் பேரில்  அவர்களை சந்திக்கச் சென்ற பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழ. வெற்றிச்செல்வன்  தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையம் அழைத்துச்  செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஜனநாயக வழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என டிடிவி.தினகரன் பதிவிட்டுள்ளார். 

click me!