தேமுதிக 2.0 என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது - தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் பேச்சு

By Velmurugan s  |  First Published Feb 13, 2024, 12:18 PM IST

தேமுதிக 2.0 என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாகவும், விஜயகாந்த் விட்டுச் சென்ற தேரை இழுக தாம் தயாராக இருப்பதாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்சி நிர்வாகியின் புதுமனை புகு விழாவிற்கு தேமுதிக விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது மேடையில் பேசிய விஜயபிரபாகரன், நான் எந்த மீடியாவிலும் இதுவரை  பேசியது இல்லை. முதலில் புண்ணிய பூமியான ராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுகிறேன். இதை கேப்டன் ஏற்பாடு செய்துள்ளார்.

தேமுதிக 2.0 இந்த புனித ஸ்தலத்தில் இருந்து தொடங்கி உள்ளோம். கேப்டன் சராசரி வாழ்க்கை வாழவில்லை, மிகப்பெரிய தலைவராக வாழ்ந்துள்ளார். கேப்டன் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களில் உள்ளார். நான் என் தந்தையிடம் கேட்டது உங்களுடைய சொத்து வேண்டாம். நீங்கள் சம்பாதித்து வைத்த தொண்டர்கள் மட்டும் போதும். உங்களுக்காக மட்டும் தான் கேப்டன் எங்களை விட்டு சென்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

விருதுநகரில் பல்கலைக்கழகத்தில் ஒரே ஊரை சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை

பிரபஞ்சம் இருக்கும் வரை தேமுதிக என்ற கட்சியும், முரசு என்ற சின்னமும் இருக்கும். சில ஆண்டுகளாக தேமுதிக தோல்வி அடைந்தது என கூறிக் கொண்டிருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் கட்சி தொய்வு அடைந்ததாக கூறுகிறார்கள். ஆனால் ராமநாதபுரத்தில் பார்த்த போது கேப்டன் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. உண்மையான விசுவாசிகள் இருக்கும் வரை தேமுதிக கட்சியில் இருந்து ஒரு செங்கலை கூட பிரிக்க முடியாது.

இத்தனை வருடங்களாக கேப்டனை புரிந்துகொள்ளவில்லையே என மக்கள் இப்போது வருத்தப்படுகின்றனர். எனது கையை பிடித்து தவறு செய்துவிட்டோம் என்று கூறி வருந்துகின்றனர். கேப்டன் உங்களுக்கான தலைவர், தேமுதிக மக்களுக்கான கட்சி. நாம் கண்ணாடி போல் இயங்க வேண்டும் நான் எப்படியோ அப்படித்தான் நீங்களும் நீங்கள் எப்படியோ அப்படித்தான் நானும் இருக்க வேண்டும், நீங்கள் 100 சதவீதம் உழைக்க உழைக்க கீழே இருப்பவர்கள் அனைவரும் மாறுவார்கள்.

முதல்நாள் சமைத்த கோழிக்கறியை சாப்பிட்ட சிறுமி பலி; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்தத் தேர்தலில் அனைவருமே தேமுதிகவிற்கு அனுதாப ஓட்டு வரும் என சொல்கிறார்கள். தேமுதிகவின் உண்மையான நிலையை நிரூபிக்க வேண்டும். இது தேர்தலுக்கான பேச்சு இல்லை. கேப்டனின் ஆசை, அந்த ஆசையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும். எங்க அப்பாவின் தேரை நான் இழுக்க தயார். என்னுடன் சேர்ந்து தேரை இழுக்க யார் தயாராக இருக்கிறீர்கள்? 2024 தேர்தல் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தேமுதிக தொண்டர்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.

click me!