சட்டவிரோத பண பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி , தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பணியாற்றியபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்தததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வந்தார். இதற்கு தமிழக ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தார்.
அமைச்சர் பதவி ராஜினாமா- ஒப்புதல் அளித்த ஆளுநர்
இதனையடுத்து செந்தில் பாலாஜி பலமுறை ஜாமின் கேட்டும் நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 230 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி நேற்று தனது ராஜினாமா கடிதத்தை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தார். இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் அனுப்பிவைத்தார். தற்போது செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா செய்ததற்கு பின்னனி என்ன.? வெளியான முக்கிய தகவல்