கேப்டன் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். தொண்டர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு தந்த பொறுப்பு மலர்கிரீடம் கிடையாது. முள்கிரீடம்.
இன்று அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் உள்ள ஜி.டி.என்.பேலஸ் மஹாலில் நடைபெற்றது. மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். சிலர் விஜயகாந்தை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதையும் படிங்க;- Premalatha Vijayakanth! விஜயகாந்த் இடத்தை பிடித்த பிரேமலதா!பொதுக்குழு கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு.!
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்;- கேப்டன் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். தொண்டர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு தந்த பொறுப்பு மலர்கிரீடம் கிடையாது. முள்கிரீடம்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 29 தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். அந்த வரலாறு மீண்டும் திரும்பும். இதுவரை தேமுதிக ஒரு எம்.பி. கணக்கை கூட தொடங்கவில்லை. 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று மீண்டும் சட்ட சபைக்கு செல்வார்கள். 2026-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி. நான் வெறும் பொதுச்செயலாளர் அல்ல. கட்சியின் வளர்ச்சிக்காக உங்களோடு சேர்ந்து வேலை செய்ய முதல் வேலையாளாக நிற்கிறேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இன்று அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சிகளும் கூட்டணி முடிவு எடுக்க முடியாத சூழல் உள்ளது. நான் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு இணைந்து நீங்கள் அனைவரும் உண்மையாக, ஒற்றுமையாக உழைக்க தயாரா என்பதுதான் என்னுடைய கேள்வி. காரணம், பலர் என் முன்னால் ஒன்று பேசுகிறீர்கள் என பிரேமலதா கூறியுள்ளார். மேலும், என் கண்ணின் இமை போல கேப்டனை பார்த்துக்கொள்வேன். அவர் 100 வயது வரை வாழ்வார். அவருக்கு எந்த குறையும் வராது. கேப்டன் நலம் பெற வேண்டுமென்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.