உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக... விஜயகாந்த் எடுத்த துணிச்சல் முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Sep 15, 2021, 12:17 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிக நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் என விஜயகாந்த தெரிவித்துள்ளார். 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ‘’ தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021, 9 மாவட்ட உரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகிற அனைத்து நிர்வாகிகளும் , தொண்டர்களும், ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021  ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மணுவை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த கழக தலைமை அலுவலகத்தில் ஒப்ப்டைக்க வேண்டும்.

click me!