தேமுதிக கொடிகளை பிடுங்கி எறிந்த அதிமுகவினர்…..கூட்டணி குறித்து அறிவிக்காததால் கடுப்பு !!

By Selvanayagam PFirst Published Mar 6, 2019, 9:14 AM IST
Highlights

பிரதமர் மோடியின் வருகையையொட்டி வண்டலூரில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளும், தோரணங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில், தேமுதிகவின் கொடிகளை அதிமுகவினர் பிடுங்கி எறிந்தனர். கூட்டணில் இன்னும் சேராத தேமுதிவினர் ஏன் கொடிகளை வைத்துள்ளனர் என அதிமுக செம கடுப்பில் உள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் இந்த கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டுவர பாஜக மற்றும் அதிமுக எவ்வளவோ முயன்று வருகிறது. ஆனால் தேமுதிக கடந்த இரு நாட்களாக அதிமுகவுக்கு தண்ணி காட்டி வருகிறது.

இதனிடையே இன்று சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கூட்டணி முடிவு செய்யப்பட்டு அதன் தலைவர்களை மேடையேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தேமுதிக தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதால் அதிமுகவினர் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் தேமுதிக கூட்டணியில் இணைந்துவிடும் என்ற நமம்பிக்கையுடன் வண்டலூரில் தேமுதிக கொடிகள் நடப்பட்டன.  ஆனால் தேமுதிக அதன் முடிவை அறிவிக்காததால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு நடப்பட்டிருந்த தேமுதிக கொடிகளை அதிமுகவின் பிடுங்கி எறிந்தனர். இதையடுத்து தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும் மேடையில் வைக்கப்படிருந்த விஜயகாந்த் பட்ங்களும் அகற்றப்பட்டன. செய்தித் தாள்களளில்  வந்த விளம்பரங்களிலும் விஜயகாந்த் படங்கள்  இடம் பெறவில்லை

click me!