வறுமையை ஒழித்து மக்களை தங்கத்தட்டில் தாலாட்டுவேன் - பிரேமலதா பேச்சு

By Velmurugan sFirst Published Dec 25, 2022, 1:36 PM IST
Highlights

தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வறுமையை ஒழித்து மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று கூறிய விஜயகாந்தின் வார்த்தைகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு உணவு, புத்தாடை, கேக் உள்ளிட்டவற்றை வழங்கி மகிழ்ந்தார்.

எனக்கு அரசியல் அறிவு இல்லைனு சொல்லுவீங்களா? டென்ஷனான தமிழிசை

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், நமது கட்சி தற்போது தொய்வுடன் இருக்கலாம், கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும், வறுமைக்கோட்டிற்கு கீழ் யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கட்சியைத் தொடங்கினார்.

 துப்பாக்கியை எடுக்கவும் தயங்க வேண்டாம்; காவலர்களுக்கு டிஜிபி அறிவுரை

2023ம் ஆண்டில் இருந்து கட்சியின் வளர்ச்சி சக்கரம் சுற்ற ஆரம்பிக்கும், வறுமையை ஒழித்து மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்ற கேப்டன் விஜயகாந்தின் வார்த்தைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.

click me!