
சசிகலா அனுமதி பெற்று உண்மையான பொதுக்குழுவை கூட்ட இருக்கிறோம் எனவும், டிடிவி தினகரன் நியமனங்கள் செல்லாது என்பதை தொண்டர்கள் தான் சொல்லவேண்டும் எனவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி மற்றும் பன்னீர் தலைமையில், இன்று அதிமுக பொதுகுழு மற்றும் செயற்குழு கூடியது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 7 வது தீர்மானமாக அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும், 8 வது தீர்மானமாக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களும் ரத்து செய்யபடுவதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், டிடிவி கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், சசிகலா அனுமதி பெற்று உண்மையான பொதுக்குழுவை கூட்ட இருக்கிறோம் எனவும், டிடிவி தினகரன் நியமனங்கள் செல்லாது என்பதை தொண்டர்கள் தான் சொல்லவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பொதுக்குழுவுக்கு யார் யாரை அழைத்துள்ளார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.