இந்நிலையில், தற்போது தனது அண்ணா திராவிடர் கழகத்தை அதிமுகவுடன் திவாகரன் இணைக்கவுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு சசிகலாவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரன் தன்னுடைய அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்க உள்ளதாக சசிகலா தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் திடீர் ரத்து.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல் !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இதனையடுத்து டிடிவி தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறினர். தினகரன், திவாகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இச்சூழலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கி நடத்தி வருகிறார். இதனிடையே, சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்னும் பெயரில் கட்சியை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினார். திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. இதைத்தொடர்ந்து ‘சசிகலா இனி என் சகோதரி இல்லை’ என செய்தியாளர்கள் சந்திப்பின்போது திவாகரன் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை
இந்நிலையில், தற்போது தனது அண்ணா திராவிடர் கழகத்தை அதிமுகவுடன் திவாகரன் இணைக்கவுள்ளார். இதுதொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சசிகலா சார்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில் தாய் கழகமான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வரும் 12-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத்தொண்டர்கள் மற்று் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் இணைப்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு என்ன விதமான பிரச்சனைகளை கொடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் செய்திகளுக்கு.. எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!