டிடிவி கட்சி மெயின் டிக்கெட் காலி!! மாவட்ட செயலாளர் அதிமுகவில் சேர்ந்ததால் அதிர்ச்சி...

Published : Mar 09, 2019, 12:55 PM ISTUpdated : Mar 09, 2019, 12:56 PM IST
டிடிவி கட்சி மெயின் டிக்கெட் காலி!! மாவட்ட செயலாளர் அதிமுகவில்  சேர்ந்ததால் அதிர்ச்சி...

சுருக்கம்

கடந்த சில மாதங்களாக தினகரன் கூடாரத்திலிருந்து திமுகவிற்கு தாவும் நிலையில், அமமுக-வின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தினகரன் சமுதாய இயக்கம் போல் கட்சி நடத்துவதாக கூறி அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து, மீண்டும் அவர் தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக கொண்டார். இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், சமுதாய இயக்கம் போல் கட்சியை தினகரன் நடத்துவதாக கூறினார்.

வழக்கமாக தினகரன் அணியிலிருப்பவர்கள் திமுக பக்கம் சாய்ந்து வரும் நிலையில், திமுகவில் தற்போது தேர்தல் வேளைகளில் பிசியாக இருப்பதால், டம்மியாக எதற்கும் தேறாத டிக்கெட்டுகளை  சீண்டாத நிலையில் கூச்சப்படாமல் மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தது வருகின்றனர் அதிமுகவின் பழைய கைகள். முதலில்  முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில்  இணைந்ததை அடுத்து, தினகரனின் மெயின் விக்கெட்டான சண்முகநாதன் அதிமுகவில் இணைந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!