தடுப்பூசிக்காக காத்திருந்து ஏமார்ந்த மக்கள்.. தடுப்பூசி மையத்தில் அலுவலர்களுடன் வாக்குவாதம்.. பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jul 5, 2021, 10:25 AM IST
Highlights

மேலும், தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், தடுப்பூசி இல்லை என்றால் முன்னதாகவே தெரிவிக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி இல்லை என தெரிந்து பின் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்த வரும் நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி தட்டுபாடு நிலவி வருகிறது.  இந்த நிலையில் இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை, குறிப்பாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இன்று சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது என்றும், தடுப்பூசி வந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம்  புலியூர் மேல் நிலை பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர், ஆனால் தடுப்பூசி இன்று போடவில்லை என்ற பெயர் பலகையை 7 மணிக்கு பிறகு சுகாதாரப்பணியாளர்கள் வைத்தனர். அதுவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லை என்ற பெயர் பலகையை பார்த்தவுடன் தடுப்பூசி மையத்தில் உள்ள அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும், தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், தடுப்பூசி இல்லை என்றால் முன்னதாகவே தெரிவிக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் மொத்தமாக 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ளது, அதில் தற்போது வரையும் 1,57,41,118 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று 66679 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மத்திய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே அடுத்து தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்படும். 
 

click me!