
கோயம்புத்தூர் ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உட்பட இன்று முதல் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தொடங்கியது. கொரோனா நோய் தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய11மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து சேவை இயக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அந்த மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்ததன் காரணமாக இன்று முதல் அந்த மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தொடங்கி இருக்கிறது.அதேபோல மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்க தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது, மேலும் பயணிகளின் வருகை ஏற்ப தேவையான அளவு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.