தமிழகத்தில் இதுவரை 1.57 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 5, 2021, 9:12 AM IST
Highlights

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 66679 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் தற்போதுவரை மொத்தமாக 1,57,76,860 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இன்றுவரை 1,57,41,118 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 66679 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் தற்போதுவரை  மொத்தமாக 1,57,76,860 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இன்றுவரை 1,57,41,118 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் இரண்டில் இருந்து மொத்தமாக தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளின்படி, கோவாக்சின் 25,35,300 

கோவிஷூல்டு - 1,32,41,560, மொத்தம் வருகை - 1,57,76,860, நேற்று வரை மொத்தம் தடுப்பூசி செலுத்தப்பட்டது - 1,57,41,118 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரக்கூடிய சூழலில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போட தொடங்கியபோது நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி வந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிகரித்து நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 66679 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 8,86,610  தடுப்பூசி வந்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரக்கூடிய சூழலில் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய தடுப்பூசி கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கையிருப்பில்  குறைவான தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும்  தடுப்பூசி செலுத்தவில்லை, தடுப்பூசி வந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!