ஒருவழியாக ஓய்ந்த கொரோனா.. ஹாயாக சைக்கிளிங் சென்று ரிலாக்ஸ் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.

Published : Jul 05, 2021, 09:49 AM IST
ஒருவழியாக ஓய்ந்த கொரோனா.. ஹாயாக சைக்கிளிங் சென்று ரிலாக்ஸ் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.

சுருக்கம்

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், நினைவிடத்தின் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து தேனீர் அருந்தினார்.  

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், நினைவிடத்தின் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து தேனீர் அருந்தினார்.அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நினைவிடத்தின் வளாகத்தில் அமர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேனீர் அருந்தினார். மேலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களோடு அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக நேற்றுடன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.

ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கொரோனா தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி தொற்று பாதிப்பைக் குறைத்தற்குப் பிறகு நேற்று காலை முதலமைச்சர் ரிலாக்சாக சைக்கிளிங் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அண்ணா கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் சிறிது நேரம் அமர்ந்து தேனீர் அருந்திச் சென்றார். திமுக ஆட்சி அமைத்தற்குப்பிறகு நான்காவது முறையாக நினைவிடம் செய்கிறார் முதலமைச்சர் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!