தனது ஆட்களை வைத்துக்கொண்டு செய்த காரியம்... ஆதாரத்தோடு மாட்டிக் கொண்ட இயக்குநர் மோகன் ஜி..!

By Thiraviaraj RMFirst Published Nov 9, 2021, 11:03 AM IST
Highlights

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிமத வேறுபாடு இருப்பதாக அவர் கருதினால் ஏன், கிருஸ்தவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ சேர்ந்திருக்கலாம் இல்லையா? 

நான் படம் எடுத்தால் பார்ப்பவர்கள் இருக்கும் வரை அவர்களுக்காக படம் எடுத்துக் கொண்டேதான் இருப்பேன்’’’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர்மோகன் ஜி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’கண்ணுக்கு படுகிற பிரச்சினைகளை, என் ஜாதியில் உள்ள பிரச்சினைகளைத்தான் என் படத்தில் எடுத்து பேசுகிறேன். வன்னியரை கிறிஸ்துவராக பயன்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும். தலித் மக்கள் பிசிஆர் வழக்கை தப்பாக பயன்படுத்தவில்லை. அவர்களை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.

கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டால் நீங்கள் வன்னியர் ஜாதியை பயன்படுத்தக்கூடாது. பிசிஆர் வழக்கால் பாதிக்கப்படுவது அதிகம் எங்கள் ஜாதி மக்கள் தான். என் ஜாதி மக்களுக்காக தான் படம் எடுத்தேன். தலித் மக்கள் பிசிஆர் வழக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களுக்கு தலைவராக உள்ள ஒருத்தர் அந்த பிசிஆர் வழக்கை பயன்படுத்தி எப்படி ஒரு போலீஸ்காரரை பழிவாங்குகிறார் என்பதுதான் ருத்ரதாண்டவம்  படத்தின் கதை. 

அம்பேத்கர் பவுத்த மதத்துக்கு சென்றார். ஏன் அவர் இந்து மதத்தைவிட்டு பௌத்த மதத்திற்கு சென்றார் என்றால் இந்த இடத்தில் ஜாதி மத வேறுபாடு இருப்பதாக சென்றார். இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிமத வேறுபாடு இருப்பதாக அவர் கருதினால் ஏன், கிருஸ்தவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ சேர்ந்திருக்கலாம் இல்லையா? அவர் ஏன் அந்த இரண்டு மதங்களையும் விலக்கினார்.?

சாதிய அடக்குமுறைகள் அதிகம் இருப்பதாக கூறி மாறினார். 40 வருடத்திற்கு முன்பு நடந்த அடக்குமுறைகளை வைத்துதான் அம்பேத்கர் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் தற்போது சமத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மொத்தமாக மாறி விட்டதா என்று கேட்டால் இல்லை. ஆனால் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் வித்தியாசம் நடந்திருக்கிறது.

அப்போது குறிக்கிட்ட நெறியாளர், ‘’உங்களது படம் திட்டமிட்டே ஒரு சாரரால் பரப்பப்படுகிறது. உங்களுக்கு வேண்டியவர்களே திரும்ப திரும்ப விமர்சனம் செய்கிறார்கள்’’ எனக் கூறி சில போட்டோ ஆதாரங்களை காட்டுகிறார்.  அதற்கு பதிலளித்த மோகன் ஜி, ‘’எனக்கு சப்போர்ட் செய்யச் சொல்லி பத்து பேரை சம்பளத்திற்கு வைத்துக்கொண்டு என் படங்களுக்கு நான் நான் விமர்சனம் செய்ய சொன்னேனா?

அந்த தம்பிக்கும், எனக்கும் இருக்கிற தொடர்பை நிரூபியுங்கள்’’ என்கிறார் மோகன். அதற்கு பதிலளித்துள்ள நெறியாளர், ’’அவர் பெயர் கதிரவன். உங்களுடன் பயணிப்பவர். இந்தப் படத்தின் பிரிவியூ எல்லாம் பார்த்து விட்டார். ஆனால் புதிதாக படம் பார்ப்பதாக கூறிக்கொண்டு பல தியேட்டர்களுக்கு சென்று  புதிதாக படம் பார்த்தது போல் பேசுகிறார்’’ எனக் கேட்கிறார்.

அதனை மறுக்கும் இயக்குநர் மோகனோ, ‘’எனக்கும், அவருக்கும் என்ன தொடர்பு என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்’’ என்றவுடன் அவருடன்  குறிப்பிட்ட நபர் இருக்கும் போட்டோக்கள் கட்டப்படுகிறது. உடனே தனது பேச்சை மாற்றிய மோகன், ‘’அவர் எனது ரசிகர். எப்படி எனக்கு நெருக்கம் இல்லாமல் இருப்பார்கள்.
இப்போ விஜய் சாருக்கும், ரஜினி சாருக்கும், அஜித் சாருக்கும் உள்ள ரசிகர்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்க மாட்டார்களா? ஆமாம் திட்டமிட்டு பிம்பத்தை உருவாக்குகிறேன். அதற்கு என்ன? நான் ஒப்புக் கொள்கிறேன். அவர் பெயர் கதிரவன். விழுப்புரம் மாவட்டம் பில்லூர்’’ என ஒப்புக்கொண்டார் மோகன். 

பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் எப்போதும் ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பார்கள் சமூகத்தை சீரழிப்பது இந்த சினிமா மோகம் தான் என்று கூறுவார்கள். அதே பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் இப்போது மோகன்ஜி அவர்களின் படத்திற்கு பால் ஊற்றுகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மோகன், ‘’ அப்படியானால் தர்மதுரை என்று ஒரு படம் வந்தது போது மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அந்தப் படத்தைப் பாராட்டியது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? அவர் சினிமா மோகம் கெடுக்கிறது என்று எதற்காக சொன்னார் தெரியுமா? ஹீரோ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் பிடித்துக் கொண்டு நிற்பார். அதை தவறு என்று சொன்னார்கள். 

கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் மருத்துவர் வரவேற்க மாட்டார். பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களை கரெக்டாக மாற்றி இந்துத்துவாவாதிகள் ஆக மாற்றுவதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் நிரூபித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன். சம்பந்தம் இல்லாமல் என் மீது குற்றம் கூறி வருகிறீர்கள். அதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

நான் படம் எடுத்தால் பார்ப்பவர்கள் இருக்கும் வரை அவர்களுக்காக படம் எடுத்துக் கொண்டேதான் இருப்பேன்’’’ எனத் தெரிவித்துள்ளார் மோகன் ஜி.

click me!