குடிகார தந்தையை திருத்த தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ்…. பிளஸ் 2 வில் எத்தனை மார்க் வாங்கியிருக்கிறார் தெரியுமா ?

Asianet News Tamil  
Published : May 17, 2018, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
குடிகார தந்தையை திருத்த தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ்…. பிளஸ் 2 வில் எத்தனை மார்க் வாங்கியிருக்கிறார் தெரியுமா ?

சுருக்கம்

Dinesh got 1024 marks in plus 2

நெல்லை அருகே தனது குடிகார தந்தையை திருத்துவதற்காக ரயில்வே பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ் நல்லசிவன், நேற்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் நல்லசிவன் பிளஸ்-2 முடித்துள்ளார். ரிசல்ட்டுக்காக காத்திருந்ரு தினேஷ் நீட் தேர்வு எழுதவும் படித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர் எழுதியிருந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது மதுப்பழக்கத்தை கைவிடுமாறு தந்தைக்கு அவர் உருக்கமான கோரிக்கை விடுத்து இருந்தார். மதுக்கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தினேஷின் பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது, தினேஷ்  தனது பிளஸ் 2 வில் 1024 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதை கேள்விப்பட்டதும் தினேஷின் குடுப்பத்தினர் கதறி அழுதனர்.

நன்கு  படிக்கும் திறன் கொண்ட அவர் அவசரப்பட்டு தனது முடிவைத் தேடிக் கொண்டாரே என அவர்களது குடும்பத்தினர் அழுதது அனைவரையும் உருக்குவதாக அமைந்திருந்தது

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!