
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று 16-ந்தேதி(புதன்கிழமை) குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மீனவர்கள், விவசாயிகளை சந்தித்தார். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசினார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட கமல்ஹாசன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி சென்றார்.
குளச்சல் பஜார், திங்கள்சந்தை, கருங்கல் போன்ற இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்பட்ட கமல்ஹாசன் கூடங்குளம் வழியாக தூத்துக்குடி செல்லவுள்ளார் இந்நிலையில் பன்ங்குடியில் பேசிய கமல்ஹாசன்
மக்களின் தேவையை அறிந்து கொள்ளவே மக்கள் நீதி மய்யம் சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ளது. உங்களை நான் அறிந்து கொள்வதற்காகவே இந்த பயணம். மக்கள் நீதிபயணத்தின் வழிகாட்டிகள் நீங்கள்தான் உங்கள் தேவையறியாமல் நாங்கள் செயல்பட முடியாது. உங்கள் கண்ணில் கண் பார்த்து உங்கள் அன்பை காற்றோடு காற்றாய் சுவாசித்து இதில் கிடைக்கும் சுகம், சந்தோஷம், ஞானம் வேறு எதிலும் பெறமுடியாது. நான் இந்தப்பயணத்தை உங்களைபற்றி அறியவும் ஞானத்தை பெறவதற்காக மேற்கொண்டுள்ளேன் எனப் பேசினார்.