எடியூரில் பிறந்த எடியூரப்பா மாஸ் லீடர் ஆனது எப்படி? தெரியாதவர்கள் மட்டும் படிங்க...

 
Published : May 17, 2018, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
எடியூரில் பிறந்த எடியூரப்பா மாஸ் லீடர் ஆனது எப்படி? தெரியாதவர்கள் மட்டும் படிங்க...

சுருக்கம்

Karnataka Chief Minister B S Yeddyurappa biography

ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அமைச்சர் யாரும் இன்றி கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்ற எடியுரப்பா தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா 3 வது முறையாக அரியணை ஏறியுள்ளார்.
பூகனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார்.

பாஜகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.பல சிக்கல்கள் இழுபறிகளுக்கு நடுவே கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு இதோ...

மாண்டியா மாவட்டம் கேஆர் தாலுக்கா, பூகனகெரேவில் 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார்.
எடியூரப்பாவின் பெற்றோர் சித்தலிங்கப்பா- பட்டதாயம்மா ஆவர்.

தும்கூர் மாவட்டம் எடியூரில் உள்ள கோவிலில் உள்ள கடவுளின் பெயராக அவருக்கு எடியூரப்பா என பெயர் சூட்டப்பட்டது.

நான்கு வயதாக இருக்கும்போதே தாயை இழந்தார் எடியூரப்பா.
மாண்டியாவில் கல்லூரி படிப்பை முடித்தார்.

1965 ஆம் ஆண்டு சேர்ந்த சில வருடங்களில் அரசுப்பணியை உதறிவிட்டு ஷிகாரிபுரா தொகுதியில் உள்ள வீரபத்ரா சாஸ்திரி சங்கர் ரைஸ் மில்லில் கிளர்க்காக பணியை தொடங்கினார்.

1967ஆம் ஆண்டு ரைஸ் மில் உரிமையாளரின் மகள் மைத்திரி தேவியை மணந்தார்.
ஷிவமோகாவில் ஹார்டுவேர் கடையை திறந்தார்.

ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரண்டு மகன்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.மனைவி மைத்திரி தேவி 2004ஆம் ஆண்டு சம்பில் நீர் எடுத்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.

கல்லூரி நாட்களிலேயே ஆர்எஸ்எஸில் அதிக ஆர்வத்துடன் இருந்தார்.
1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக உயர்ந்தார்.

1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட அதில் வெற்றி பெற்றார்.

அந்த தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்ட அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

1994-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தோல்வியைச் சந்தித்த போதிலும், அங்குள்ள மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

2004-ம் ஆண்டு மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வாகி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

கடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார்.

20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது.

2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது.
7 நாளில் இவரது ஆட்சி கவிழ்ந்தது.

2008 மே 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார்.

இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

3ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார்.
இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்த நிலையில் 2011 ஜூலை 31 ஆம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.
கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார்.

கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.
கர்நாடகாவின் 23வது முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!