பதவியேற்றுவிட்டால் வானம் இடிந்து விடுமா? 15 நாள் வேண்டாம் வெறும் ஏழே நாள் போதும்... பரபரப்பான நள்ளிரவு வாக்குவாதத்தில் பின்னியெடுத்த பிஜேபி...

First Published May 17, 2018, 10:22 AM IST
Highlights
Battle for Karnataka in SC Abhishek Manu Singhvi vs Mukul Rohatgi


‘நடு இரவில் நான் எழுப்பப்பட்டேன். இந்த மனு நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்திருக்கக் கூடாது. ஒருவர் பதவியேற்றுவிட்டால் வானம் இடிந்து விடுமா? என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.

முன்னதாக எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை  மணிநேரம் நீடித்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தா, முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகிய 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.  இதில் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடும் போது, பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து வாதிட்ட பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘நடு இரவில் நான் எழுப்பப்பட்டேன். இந்த மனு நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்திருக்கக் கூடாது. ஒருவர் பதவியேற்றுவிட்டால் வானம் இடிந்து விடுமா? காங்கிரஸ் மனு தாக்கல் செய்திருப்பது இது ஜனநாயக வழிமுறைகளை நசுக்குவதற்கான முயற்சி.

ஆளுநரின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம், ஆனால் அவரது கடமைகளை செய்வதில் இருந்து தடுக்க முடியாது. எடியூரப்பா முதலமைச்சர் ஆகிய பிறகு வேண்டுமென்றால் அவரை நீக்குங்கள். ஆனால் நீங்கள் ஆளுநரை கேள்வி எழுப்ப முடியாது’ என்று வாதிட்டார்.

இதற்கிடையே பாஜக ஆட்சியமைத்தால் 7 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத்தாயர் என மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் தெரிவித்தனர்.

click me!