
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அமைச்சர் யாரும் இன்றி கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழம்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக்க எடியூரப்பா பதவி ஏற்கிறார். பிஜேபி கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பிஜேபி கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். மாறாக 78 இடங்களில் கைப்பற்றிய காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது ஆனால் ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்.
ராஜ்பவனில் நடைபெற்ற கோலாகல தொடங்கிய விழாவில், இன்று காலை 9 மணிக்கு பி.எஸ். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.
இதில், முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக், முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீராமுலு, கோவிந்த் கார்ஜோல் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என சொல்லப்பட்ட நிலையில், ஆனால் கடைசி நேரத்தில் பாஜக மேலிடத்தில் இருந்து க்ரீன் சிக்னல் வராததால் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டில், பாஜக அரசு அமைவதற்கு எதிராக காங்கிரஸ்-மஜத தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை அமைச்சரவையை உருவாக்க வேண்டாம் என்று, டெல்லியிலிருந்து தகவல் வந்ததால் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவில்லை என கூறப்படுகிறது.