
ஜெயலலிதாவின் ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரும் என்றும், அதே நேரத்தில் ஓபிஎஸ் சொன்னதைப் போல், தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு, இணைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இரு தரப்பு தலைவர்களும் ஓவராக பேசிவருவதால் இந்த முயற்சி தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் என ஓபிஎஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தற்போது நடைபெற்று வரம் ஜெயலலிதா ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் 2 மாதம் தொடரும் என தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் சொன்னதைப் போல விரைவில் தேர்தல் வந்தால் அதனை சந்திக்க அம்மா அணியினர் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கண்டிப்பாக அந்தத் தேர்தலிலும் அம்மா அணிதான் வெற்றி பெறும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.