மொத்த சொத்தும் அவங்ககிட்டதானே போச்சு! அவங்களே அனுபவிக்கட்டும்! விவேக்கை கழட்டிவிட்ட தினகரன்!

First Published Nov 14, 2017, 12:03 PM IST
Highlights
Dinakaran Tension


சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். கோடநாடு பங்களா, டீ எஸ்டேட் உட்பட சில இடங்களில் மட்டும் 6-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டாலும், இளவரசியின் மகனும் ஜெயா டிவி மற்றும் ஜாஸ்
சினிமாஸை நிர்வகித்து வருபவருமான விவேக்கை மையமாக வைத்தே தீவிர சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

விவேக் வீட்டிலும், ஜெயா டிவியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளரான டி.டி.வி.தினகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தினகரன் ஆதரவாளர்கள், விவேக் வீட்டுக்கும், ஜெயா டிவிக்கும் போய் வந்தபடியே இருந்தார்கள் என்றும் டிடிவி தினகரன் இதுவரை அந்த பக்கம் போகவே இல்லை என்றும் தெரிகிறது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த போது 5 நாட்கள் பரோல் கேட்டு சசிகலா வெளியே வந்தார். பரோலில் வெளியே வந்த சசிகலா, தினமும் மருத்துவமனைக்கு சென்று நடராஜனைக் கவனித்துக் கொண்டார். பரோல் காலம் முடிந்தவுடன் அவர் மீண்டும் சிறைக்கு சென்றார்.

பரோலில் வந்த சசிகலா, தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் ஆகியோர்களின் பெயர்களில் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக விவேக் மற்றும் கிருஷ்ணபிரியா வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து கொண்டிருந்தபோது, தினகரன் ஆதரவாளர்கள் எல்லோரும் விவேக் வீட்டுக்கும், ஜெயா டிவிக்கும் போய் வந்தபடியே இருந்தார்கள். ஆனால், தினகரன் அந்தப்பக்கம் போகவே இல்லை. சிறையில் இருந்து சசிகலா பரோலில் வந்துபோன பிறகு, முக்கிய பொறுப்புகள் எல்லாமே விவேக் கைக்கு மாறியதாக தெரிகிறது. இதனால் டிடிவி தினகரன் டென்ஷன் ஆகிவிட்டார். வரவு - செலவு கணக்குக்கூட விவேக்கிடம்
அனுமதி வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தினகரன் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த விவகாரம்தான், தினகரனை உச்சபட்ச டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏ. ஒருவரிடம், தினகரன், என்கிட்ட எதுவுமே இல்ல... எல்லாம் விவேக்தானே பார்த்துட்டு இருக்காரு... கடந்த 6 வருஷமா என்ன நடந்துச்சுன்னுகூட எனக்கு தெரியாது... கூடவே இருந்து பார்த்தது அவருதானே.... அதனாலதான் இப்போ அவரை கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. என் வீட்ல ஒரே நாளில் ரெய்டு முடிஞ்சுடுச்சு. ஆனால் அங்கே இன்னும் ரெய்டு நடந்துட்டு இருக்கு. இதுல இருந்தே நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா... எல்லாம் எங்கே இருக்குன்னு. என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த எம்.எல்.ஏ.வோ, இப்போ அதையெல்லாம் பார்த்துட்டு இருக்காதீங்க... என்னதான் இருந்தாலும் அவரு நம்ம புள்ளதானே... இருக்கிற எல்லாத்தையும் ஒதுக்கிட்டே போனால், நம்மகூட யாருமே இருக்க மாட்டாங்க... என்று தினகரனுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதற்கு தினகரனோ
பதில் எதுவும் கூறாமல் சிரிப்பை மட்டுமே உதிர்த்திருக்கிறார்...!

click me!