
தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தி, வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 9-ம் தேதி 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்டது.
5-வது நாளாக இன்று, விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீடுகள், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 9-ம் தேதி, அதிரடியாக தொடங்கிய சோதனை புயலில் தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தியும் சிக்கினார். பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கடந்த 9-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின.