பதவியில் மட்டும் இல்லைனா.. ஓபிஎஸ், இபிஎஸ்லாம்... போட்டு தாக்கிய தினகரன்..!

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
பதவியில் மட்டும் இல்லைனா.. ஓபிஎஸ், இபிஎஸ்லாம்... போட்டு தாக்கிய தினகரன்..!

சுருக்கம்

dinakaran slams ops and eps

பதவியில் மட்டும் இல்லையென்றால் முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவின் பேச்சைக் கேட்பார்கள் என தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், பதவியில் இருப்பதால்தான் கட்சியை உடைக்கிறார்கள். பதவியில் இல்லாமல் இருந்தால், சசிகலாவின் பேச்சை கேட்டு கட்சியில் பணியாற்றுவார்கள்.

ஜெயலலிதா இருக்கும் திசையை நோக்கி வணங்குவதாக கூறியவர்கள், போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடந்தபோது அந்த பக்கமே செல்லவில்லை. சென்னையிலேயே இல்லாமல், பொந்துக்குள் ஒழிந்திருப்பது போல மதுரையில் சென்று ஒழிந்திருந்து விட்டு, மக்கள் கொந்தளிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ஒவ்வொருவராக வெளிவந்து பிதற்றுகிறார்கள்.

போயஸ் கார்டன் வீட்டில் சோதனையின்போது அந்த பக்கமே செல்லாத இவர்கள், இனிமேல் ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துவதாகக் கூறுவதற்கு தகுதியற்றவர்கள். மக்கள் நலனை காப்பதில் எல்லாம் இவர்களுக்கு அக்கறையில்லை. வடக்கே இருந்து யார் வந்தாலும் அவர்களின் காலை பிடிக்க தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு தினகரன் அதிரடியான கருத்துகளை தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்