தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு குறி..! களமிறங்கிய எடப்பாடியின் ரகசிய டீம்..!

By Selva Kathir  |  First Published Mar 19, 2019, 9:33 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் விரிவடைந்துள்ள நிலையில் தினகரனின் அமமுக வேட்பாளர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.


நாடாளுமன்றத் தேர்தல் விரிவடைந்துள்ள நிலையில் தினகரனின் அமமுக வேட்பாளர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார். மிகவும் பார்த்து நிதானமாகவும் நேர்த்தியாகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தினகரன் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் எம்பி தேர்தலுக்கான தினகரன் கட்சியின் வேட்பாளர்கள் பெரிய அளவில் பணபலம் இல்லாதவர்களாகவே உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தினகரன் கட்சியில் உள்ள பண பலம் உள்ளவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியில் தீவிரமான செயல்பாட்டில் உள்ளவர்களை தேர்வு செய்து தினகரன் வேட்பாளர் ஆக்கியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தினகரனுக்கு தேர்தலுக்கு முன்னரே பின்னடைவை ஏற்படுத்தும் வேலையில் அதிமுக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக தினகரன் கட்சியில் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு அதிமுக குறி வைத்துள்ளது. அதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தரப்புதான் தினகரன் கட்சியின் இடைத் தேர்தல் வேட்பாளர்களை வளைத்துப் போடுவதில் மிகவும் மும்முரமாக உள்ளது. தினகரன் வேட்பாளர் பட்டியலை அறிவித்து அடுத்த சில நிமிடங்களில் இதற்கான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி தேர்தலைப் பொருத்தவரை தினகரனின் வேட்பாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள் என்று எடப்பாடி கருதுகிறார். ஆனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை தற்போது தினகரன் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர்கள். பழைய எம்எல்ஏ என்கிற முறையில் அவர்கள் கணிசமான வாக்குகளை பிரிப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக நம்புகிறார்.

 

எனது 18 தொகுதி இடைத்தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு வாக்குகள் கிடைக்க வேண்டுமென்றால் தினகரன் தரப்பை பலவீனமாக வேண்டும் என்கிற ஒரு வியூகத்தை எடப்பாடி தரப்பு வகுத்துள்ளது. இந்த வியூகத்தின் படி இடைத் தேர்தல் வேட்பாளர்களை அதிமுகவில் இணைப்பது என்பது முதல் முயற்சியாகும். அப்படி அதிமுகவில் இணைய வில்லை என்றாலும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் அவர்களை அமைதியாக இருக்கச் செய்வது இரண்டாவது பிளான். இப்படி இடைத் தேர்தல் வேட்பாளர்களை சைலன்ட் ஆக்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற வியூகத்துடன் ஒரு டீம் எடப்பாடி பழனிசாமி களமிறங்கியுள்ளது. 

இந்த ரகசிய டீமில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு நபர் உதவி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர் தான் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆலோசகர் போல் செயல்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

click me!