தெறிக்க விடும் திமுக…. தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் ? புதிய கருத்துக் கணிப்பில் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Mar 19, 2019, 8:24 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அதிமுக- பாஜக கூட்டணிக்க வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும்  டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்  11 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள், எந்தெந்த மாநிலங்களில் எந்தக் கட்சிகள் எத்தனை இடங்களைக் கைப்பற்றும்  என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்வும், விஎம்ஆர் நிறுவனமும் இணைந்து ஒரு  கருத்து கணிப்பை நடத்தின. கருத்துக் கணிப்பு  முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை  திமுக தலைமையில்  காங்கிரஸ், விசிக, மதிமுக. இடது சாரிகள் அடங்கிய கட்சிகள் ஒரு அணியாகவும்,  அதிமுக தலைமையில் பாஜக,  பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

இது தவிர. டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களைப் பிடிக்கும்  என்ற கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி வட மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் பாஜக  கூட்டணி படுதோல்வி அடையும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 39 தொகுதிளில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு வெறும் 5 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குசதவீத  அடிப்படையில் பார்த்தாலும்  திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள வாக்குகளில் 52.20 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 37.20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 10.06 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

click me!