இந்தப் பக்கம் உங்க செக்கு செல்லாது…. பாஜகவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் தென் மாநிலங்கள் !! அடுத்த அதிரடி !!

By Selvanayagam PFirst Published Mar 19, 2019, 7:43 AM IST
Highlights

தென்மாநிலங்களில் தமிழகம் இல்லாமல் மற்ற மாநிலங்களில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு வெறும் 18 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
 

7 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்  11 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்வும், விஎம்ஆர் நிறுவனமும் இணைந்து ஒரு  கருத்து கணிப்பை நடத்தின. கருத்துக் கணிப்பு  முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி  வெளியிட்டுள்ளது.


அதில்  மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 283 தொகுதிகள் கிடைக்கும் என்றும், மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு 135 இடங்களே கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் தென் மாநிலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளதாக அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் இல்லாமல்  தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி படு தோல்வியை தோல்வியையை சந்திக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதாவது தென் பகுதியின்  4 மாநிலங்களில் உள்ள 80 தொகுதிகளில் அந்த கூட்டணிக்கு வெறும் 18 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் தலைப்பு செய்திகளில் அடிபட்ட கேரளாவில் பாஜக கூட்டணிக்கு படுதோல்வி கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்து கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.

கேரளாவில் மொத்தமுள்ள  20 தொகுதிகளில்  பாஜக கூட்டணிக்கு ஒரேயொரு தொகுதி தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 16 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 45 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 29.20 சதவீதமும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 21.70 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பாஜக கூட்டணிக்கு படுதோல்வி காத்திருப்பதாக தெரிகிறது. அதாவது அங்கு மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரசுக்கும் படுதோல்வி தான் என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு ஒய்எஸ்ஆர் கட்சிக்கு 22 தொகுதிகளும், தெலுங்குதேசம் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக கூட்டணிக்கு 5.8 சதவீதம் வாக்குகளும், ஒய்எஸ்ஆர் கட்சிக்கு 48.8 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும். தெலுங்குதேசம் கட்சிக்கு 38.4 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 2.2 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

click me!