திமுக கூட்டணிக்கே வெற்றி... புதிய கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்...!

By Asianet TamilFirst Published Mar 19, 2019, 6:57 AM IST
Highlights

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் மற்றும் வி.எம்.ஆர். நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இந்தக் கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில்  வெறும் 135 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

அதே வேளையில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியே தொகுதிகளை அள்ளும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, இஜக போன்ற கட்சிகள் ஒரு கூட்டணியாகப் போட்டியிடுகின்றன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புநீக, புத ஆகிய கட்சிகள் இன்னொரு கூட்டனியாகப் போட்டியிடுகின்றன. இந்த இரு கூட்டணிகளில்  தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 34 தொகுதிகளில் வெல்லும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.


இதே டைம்ஸ் நவ்- விஎம்ஆர் நிறுவனங்கள் கடந்த ஜனவரியில் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக - காங்கிரஸ் 35 தொகுதிகளில் வெல்லும் எனத் தெரிவித்திருந்தது. அப்போது திமுக கூட்டனி மட்டுமே உருவாகியிருந்தது. அதிமுக கூட்டணி உருவாகவில்லை. தற்போது கூட்டணிகள் முடிவாகிவிட்ட நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 34 தொகுதிகளையும் அதிமுக - பாஜக கூட்டணி 5 தொகுதிகளையும் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!