
வரும் அகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தேதி குறிப்பிடாமல் தமிழகத்தை சுற்றி வந்து மக்கள ஆதரவை பெற டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக நாஞ்சில் சம்பத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இரட்டை இல்லை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார் தினகரன்.
கட்சிக்காக சிறை சென்ற தினகரனுக்கு எடப்பாடி அண்ட் கோ ஆப்பையும் அல்வாவையும் மட்டுமே கொடுத்துள்ளது என குமுறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
எடப்பாடி கதையை முடிக்க முயற்சி செய்ததில் 34 எம்எல்ஏக்கள் வரை தன் பக்கம் இழுத்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர் தினகரன் ஆதரவளர்களான செந்தில் பாலாஜி, தோப்பு, பழனியப்பன் ஆகியோர்.
இந்நிலையில் வரும் 15ஆம் தேதி அன்று அரசியலில் தினகரனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் அவரது மாமா திவாகரன் 8 அமைச்சர்களோடு பிரம்மாண்ட விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மன்னார்குடியில் நடைபெறும் இவ்விழாவுக்கு எடப்பாடி முழு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
திவாகரன் ஒரு பக்கம் நடத்தும் அதே நாளில் ஓபிஎஸ்சும் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்.
இப்படி எல்லா தரப்பும் மக்களை சந்திக்க கிளம்பி விட்டதால் தினகரனும் களத்தில் குதித்து விட்டார்.
வரும் அகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஊர் ஊராக சென்று மக்கள் சந்திக்க முடிவெடுத்துள்ள தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு எடப்பாடியை கதிகலக்க முடிவு செய்துள்ளார்.
தினகரனின் இந்த பயணம் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை போன்று இருக்குமென கூறுகிறார்கள் அவரது பயண ஏற்பாட்டாளர்கள்.
எது எப்படியோ?? பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருறைதான் தமிழக அரசியல் களத்தில் சூடு பறக்கும். ஆனால் ஜெ. மறைவை அடுத்து தேர்தல் நடந்து முடிந்த 1 வருடத்துக்குள்ளாகவே அனல் பறக்க தொடங்கி விட்டது.
தினகரனின் மக்கள் தரிசனம் அவரை வளர்க்கும அல்லது வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.