
வாழ்க்கை தேடி வந்தவர்கள் தமிழகத்தில் வாழலாம், தொழில் செய்யலாம், ஆனால் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலுக்குள் நடிகர் ரஜினிகாந்த் நுழைவாரா? மாட்டாரா? என பெரும் பட்டிமன்றமே நடந்து வருகிறது. பாஜகஇ விடுதலைச் சிறுத்தைகள் உள்ள்டட கட்சிகள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் சுப்ரமணியன்சுவாமி, சீமான், அன்புமணி ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட பலர் ரஜினியை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, இயற்கை வளம்,கலாச்சாரம் ஆகியவற்றை வளர்த்தெடுத்து ஒரு வலுவான அரசை கட்டமைத்து தமிழனை தமிழனே ஆளவேண்டும் என்ற லட்சியத்தை அடைந்தே தீருவோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்பது குறித்து கருத்துத் தெரிவித்தார். அப்போது , வாழ்க்கை தேடி வந்தவர்கள் தமிழகத்தில் வாழலாம், தொழில் செய்யலாம், ஆனால் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தை ஆள நினைப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆவேசமாக தெரிவித்தார்.