
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இக்கூட்டத்தை சுமுகாக நடத்துவது குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் வரும் 16 ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முக்கியமாக ஜிஎஸ்டி, சீனாவுடனான போர்ச்சூழல், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை, மாட்டுக்கறி விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி புயலை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசு சார்பில் வரும் 16ம் தேதி காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
அன்று மாலை 7 மணிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தனியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.